கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குட் நியூஸ்: ஒப்புதல் வழங்கவிருக்கும் உலக சுகாதார நிறுவனம்?

0

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்களை ஆட்டி படைத்து வரும் கொரோனாவின் கோர பிடியில் இருந்து மக்களை தடுப்பூசி மட்டுமே காப்பாற்றி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவில் தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷில்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவாக்சினுக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் கோவாக்சின் இடம்பெறுவதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இந்த வாரம் ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் உள்ள சிக்கல் முடிவுக்கு வருகிறது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here