இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார் – பிரபல நடிகை மீது பரபரப்பு புகார்!!

0

வாங்கிய கடனை செலுத்திய பின்னரும் இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார் என பாஜகவைச் சேர்ந்த நடிகை ஜெயலட்சுமி மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் சில நாட்களுக்கு முன்பு பாஜக வில் இணைந்தார். தற்போது இவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் கொடுத்துள்ளனர்.

 

அதாவது அவர்கள் அளித்த புகாரில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் நடத்தி வருகிறார்கள். அந்த குழுவிற்கு ஜெயலட்சுமி வங்கி மூலம் 10 பைசா வட்டி விகிதத்தில் கடன் வாங்கி கொடுத்து உள்ளார். மொத்தம் 9 பெண்களுக்கு வங்கியில் இருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்கி இருக்கிறார்.

ஒவ்வொரு மாதம் முறையை வட்டியும், முதலும் செலுத்தப்பட்ட பின்னரும், ஜெயலட்சுமி நீங்கள் வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளீர்கள் என்று கூறுவதாகவும் மேலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார் என்றும் அப்பெண்கள் ஜெயலட்சுமி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here