உலகளவில் 14 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 82 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி – இந்தியாவின் நிலைமை என்ன..?

0

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.

82 ஆயிரத்தை தாண்டிய பலி..!

உலகளவில் இதுவரை 14,31,944 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 82,085 ஆக உள்ளது. மேலும் இதுவரை 3,02,209 பேர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்காவும், அதிகம் உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 4,00,540 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 12,857 பேர் உயிர் இழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 1,35,586 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 17,127 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ஸ்பெயினில் 1,41,942 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. மேலும் அங்கு இதுவரை 14,045 பேர் உயிர் இழந்துள்ளனர். வைரஸ் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் இதன் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அங்கு 81,802 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 3,333 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் இந்த வைரஸ் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 1,09,069 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 10,328 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்தியாவின் நிலைமை:

இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,356 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 160 பேர் இதுவரை உயிர் இழந்து உள்ளனர். மேலும் 468 பேர் குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here