இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு – பாதுகாத்துக் கொள்வது எப்படி..?

0

கொரோனா வைரசால் இந்தியாவில் மட்டும் இன்றைய நிலவரப்படி 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா இன்னும் பரவாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்றுவதே போதுமானது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் மட்டுமே இந்த வைரஸ் 73 பேரை பாதித்துள்ளது. இவர்களில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர் மற்றும் இது இன்று காலை 11 மணி நிலவரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கேரளாவில் மட்டுமே 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் குணமடைந்துவிட்டனர்.

தில்லியில் 6 பேருக்கும், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசத்தில் தலா 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 10 பேர் இந்தியர்கள், ஒருவர் வெளிநாட்டினர். கர்நாடகாவில் மூவருக்கும், ராஜஸ்தானில் ஒரு இந்தியர், இரண்டு வெளிநாட்டவர் என மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

எவ்வாறு பரவுகிறது..?

கொரோனா தொற்று எளிதில் பரவக் கூடிய ஒன்றாகும். இது பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ அல்லது தும்மும்போதோ காற்றில் பரவி மற்றவரையும் பாதிக்கிறது. அதனால் தான் நாம் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும்.

பாதுகாப்பு வழிமுறைகள்:

கொரோனா அதிகப்படியாக காற்றின் மூலமாகவே பரவுகிறது. இதனால் நாம் முகக்கவசம் வெளியில் செல்ல வேண்டும். சிறிது நாட்களுக்கு யாருடனும் கைகுலுக்காமல் இருப்பது நல்லது. தொண்டை எரிச்சல் அதிகப்படியான சளி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

அதே போல் வீட்டில் யாருக்காவது இந்த அறிகுறிகள் காணப்பட்டால் சற்று விலகியே இருங்கள். உங்களுக்கு கொரோனா தொற்று என்று அறிகுறிகள் தெரிந்தாலே வெளியில் செல்லாதீர்கள். அதே போல் வெளியில் எந்த பொருட்களையும் வாங்கி உண்ணாதீர்கள். கூடுமானவரை வீட்டிலேயே உண்ணுங்கள்.

பின்பு வெளியில் சென்று வந்ததும் ஹாண்ட் வாஷர் வைத்து 10 நிமிடங்கள் நன்றாக கழுவுங்கள். சோப்பு உபயோகத்தை தவிர்க்கவும் ஏனென்றால் அனைவரும் பயன்படுத்தும்போது அதனால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை சோப்புகளை தனியாகவே பயன்படுத்துங்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here