இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – 12,948 பேர் உயிரிழப்பு..!

0
Corona
Corona

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜுன் மாத இறுதியில் உச்சத்தை அடையும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து இருந்தது. தற்போது ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தொற்று பரவல் மேலும் அதிகரித்து இருப்பதை காணமுடிகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவு 14,516 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,95,048 ஆக அதிகரித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Corona Death
Corona Death

பெட்ரோல் & டீசல் விலை புதிய உச்சம் – வரலாறு காணாத விலை உயர்வு..!

ஒரே நாளில் 375 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்த காரணத்தால், பலி எண்ணிக்கை 12,948 ஆக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் தகவலாக கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைபவர்கள் சதவீதம் அதிகமாக உள்ளது. இதுவரை 2,13,381 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதித்த 1,68,269 பேருக்கு தற்போது இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதித்த டாப் 5 மாநிலங்கள்:

  1. மஹாராஷ்டிரா – 1,24,331 பேர்
  2. தமிழகம் – 54,449 பேர்
  3. டெல்லி – 53,116 பேர்
  4. குஜராத் – 26,141
  5. உத்திரபிரதேசம் – 15,785 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here