அச்சத்தில் தமிழக அமைச்சர்கள் – துணை முதல்வர் கொரோனா பரிசோதனை..!

0
Deputy CM

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த மற்ற அமைச்சர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா நிவாரண மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே கொரோனா நிவாரண உதவிகள் வழங்கி கொண்டிருந்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். மேலும் அதிமுக எம்எல்ஏ பழனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Anbalagan
Anbalagan

இந்நிலையில் நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்று பணிகளை மேற்கொண்டு இருந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜெயக்குமார், உதயகுமார், அன்பழகன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகிய அமைச்சர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – 12,948 பேர் உயிரிழப்பு..!

O Panner Selvam
O Panner Selvam

தற்போது அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மற்ற அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். மாலை வெளிவந்த முடிவில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இருப்பினும் அமைச்சர்கள் மத்தியில் கொரோனா குறித்த பீதி அதிகரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here