Wednesday, May 8, 2024

கொரோனாவை தடுக்க ஒரே வழி – ‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ திட்டத்தை துவக்கிவைத்து பிரதமர் உரை..!

Must Read

மக்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் உடல் நலனை பேணுதலே தற்போது கொரோனாவிற்கு எதிராக நாம் பயன்படுத்தும் மருந்து என்று பிரதமர் உரை நிகழ்த்தி உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

corona
corona

கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் மிகுந்த அச்சத்துக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியது, கொரோனா என்ற நோய் தொற்று. இந்த நோய் பரவலை தடுக்க மத்திய அரசு பொது முடக்கத்தை அமல் படுத்தியது. இதனால் பலர் பாதிப்புக்கு உள்ளனர். அதிலும் தின குழிகள் என்று சொல்லப்படும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் :

இதில் அதிகமாக பாதிக்க பட்டது மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை பார்த்த தொழிலாளர்கள் தான். ஒடிசா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டு போன்ற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேலை இல்லாமல் மிகுந்த தவிப்புக்கு உள்ளனர்.

Migrant workers
Migrant workers

முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகள் கூட 100 நாள் திட்டத்தில் சேர்ந்து வேலை செய்ய விண்ணப்பித்த அவலம் நேர்ந்தது. இதனால் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ திட்டம்:

மத்திய அரசு அனைவர்க்கும் வேலை விளங்கும் நோக்கில் ‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தின் அம்சங்கள்:

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Garib Kalyan Rozgar: Scheme introduced by Modi in uttar pradesh
Garib Kalyan Rozgar: Scheme introduced by Modi in uttar pradesh
  • 125 நாட்கள் வேலை வழங்கப்படும்.
  • 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
  • 25 வகையான வேலைகள் உள்ளன.
  • கிராமப்புற பொதுப் பணி திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது.

பிரதமர் உரை:

இந்த திட்டத்தை அறிமுக படுத்திய பிரதமர் உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் ” கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள நாம் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். அப்போது தான் நாம் நம்மை தற்காத்து கொள்ள முடியும்.

PM Modi
PM Modi

மேலும் அவர் கூறுகையில் ” இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உத்தரபிரதேசம் காட்டிய தைரியம், வெற்றி பெற்ற விதம், கொரோனாவை எதிர்கொண்ட விதம், நிலைமையைக் கையாண்ட விதம் இது எல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது. ஆச்சிரியம் அளிப்பதாகவும் உள்ளது.” என்று கூறி உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -