இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 11,831 பேர் பாதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

0

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையிலும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 11,831 நபர்கள் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று:

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி மும்முரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,831 பேர் புதிதாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 1,08,38,194 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவர் தானாம் – ஷாக்கில் ரசிகர்கள்!!

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் 11,904 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,34,505 ஆக உயர்ந்தது. ஆனால் மேலும் 84 பேர் தீவீர கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தனர். எனவே கொரோனா பாதிப்பின்னால் இறந்தோர் எண்ணிக்கை 1,55,080 ஆக அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய மாற்று மாநில அரசுகளின் தீவிர கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது நாடுமுழுவதும் 1,48,609 நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையிலும் 20.19 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நேற்று மட்டும் 5,32,236 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்ட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை நாடுமுழுவதும் 58 லட்சதிற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here