அதிரடியாக குறைந்த தங்க விலை – மகிழ்ச்சி திளைப்பில் மக்கள்!!

0

சென்னையில் மீண்டுமாக ஆபரணதங்கத்தின் விலை குறைந்தது. கடந்த வாரம் எதிர்பாராத அளவு உயர்ந்திருந்த ஆபரணதங்கத்தின் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.

ஆபரணதங்கம் விலை குறைவு

சென்ற வாரம் ஆபரணதங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒவ்வொரு நாளும் விற்பனையில், நகையின் விலையில் வித்தியாசங்கள் காணப்பட்டது. சுப முகூர்த்த நாட்களில் கூட எதிர்பாராத அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்து விற்பனையானது. சனிக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட ஞாயிற்று கிழமை தங்கம் விலை கூடுதலாக விற்கப்பட்டது. மீண்டும், இன்று ஆரம்பித்த தங்கம் விற்பனை மார்க்கெட், சனிக்கிழமை விலையில் சற்று குறைந்து தற்போது விற்கப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருக்கு பதிலாக இனி இவர் தானாம் – ஷாக்கில் ரசிகர்கள்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ 11 குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,458 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 88 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 35,664 ரூபாய்க்கு இன்று காலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை சற்று குறைவாக, ஒரு கிராம் வெள்ளிக்கு 30 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி ரூ 73.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here