கோவையிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை பள்ளிக்கு விடுத்த புதிய உத்தரவு!!

0

கோவை சுல்தான் பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அப்பள்ளியை சுத்தப்படுத்த இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசுபள்ளியில் கொரோனா தொற்று:

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் குறைந்துவந்ததால் இந்த மாத தொடக்கம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது பெருந்தொற்றின் பரவல் சற்று உயர்ந்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் தொற்று பரவலில் கோவை மாவட்டமானது முதலிடம் வகித்து வருகிறது.

இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!
இதனால் அம்மாவட்ட சுகாதார துறையினர்  பள்ளிகளில் கொரோனா தொற்றிற்கான சோதனையை  மேற்கொண்டனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் பரிசோதனையானது செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் 9 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு இந்த பரிசோதனையானது நடத்தப்பட்டது.
நேற்று இதற்கான முடிவு வெளியானது. அதில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு  தொற்றானது  உறுதியாகியுள்ளது.  உடனடியாக சுகாதாரத்துறையினர்  அந்த தகவலை நேற்று மாணவர்களின் பெற்றோருக்கு கொடுத்தனர். தற்போது அந்த 3 மாணவர்களுக்கும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த 3 மாணவர்களின் தொடர்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இந்த மாணவர்களில் 2 பேர்களின் பெற்றோர் கொரோனா தடுப்பூசியின் 2 தவணையும் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை அளித்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவுள்ளது.மேலும் சுகாதார துறையானது பள்ளிக்கு  3 நாட்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here