ஒரு பாட்டில் சரக்கின் விலை ரூ.70 லட்சம் – இதன் நறுமணமே போதை தருமாமே!!

0

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் சரக்கின் விலை 70 லட்சம் ரூபாய் எனவும், இதன் நறுமணமே போதை தருவதாகவும் வெளிவந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நறுமணம் தரும் போதை:

பன்னாட்டு விமான நிலையங்களில் உள்ள விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவைப்படும் பொருட்கள் அந்த விமானத்தின் பணியாளர்களால் வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.  இதில் பயணிகள் விரும்பும் மது வகையும் அடங்கும். தற்போது, பன்னாட்டு விமான நிலையத்தில் கிடைக்கும்  மதுவின் விலை  குறித்த தகவல்கள்  ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சிங்கப்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் வழங்கப்படும் ஒரு உயர்ந்த வகை மதுவின், விலை அதாவது, ஒரு பாட்டிலின் விலை 70 இலட்சம் ரூபாய் என தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.  தற்போது வரை புழக்கத்தில் உள்ள மது வகைகளில் இதுவே உலகின் உயர்ந்த வகை மது எனவும் சொல்லப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், இந்த சரக்கை திறந்து கோப்பையில் ஊற்றும் முன், சூடேற்றும் போது ஒரு நறுமணத்துடன் கூடிய புகை வெளி வரும் என்றும், அந்த நறுமணம் கலந்த புகையே ஒரு வித போதையை ஏற்படுத்துவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினோதமான, அரிய வகை மது குறித்த தகவல்கள் இணையவாசிகளை சற்றே ஆட்டம் காண வைத்துள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here