கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குக் வித் கோமாளி பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலங்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் இதற்கு தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.

ஆனாலும் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி பற்றிய பயம் இருக்க தான் செய்கிறது. இதனால் பிரபலங்கள் பலரும் முன்னுதாரணமாக தடுப்பூசி போட்டு புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் சக்கை போடு போட்ட குக் வித் கோமாளி 2 வில் கலந்துகொண்டு டைட்டிலையும் கைப்பற்றிய கனி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து ரக்சன், ரம்யா பாண்டியன் போன்றோர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here