கொரோனா குறைந்தது; ஊரடங்கு தளர்வுகள் – சந்தோஷத்தில் மக்கள்!!!

0

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதால், அங்கு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தனர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு தளர்வுகள்:

கடந்த சில வாரங்களாகவே அனைத்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் சுமார் 38 ஆயிரம் பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தநிலை மாறியுள்ளது; அதாவது பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா 2ஆம் அலை வெகுவாக குறைந்துள்ளதால் பிரான்ஸ் அரசாங்கம் பல தளர்வுகளை செய்துள்ளது. இதனால் அந்நாட்டில் மக்கள் அனைவரும் இப்போது எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

திரைப்பட அரங்குகள், உணவு விடுதிகள், அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்து கடைகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் ஜூன் 9 முதல் 65 சதவீதமும், ஜூன் 30 முதல் 100 சதவீத இடங்களுக்கு அனுமதியளிக்கப்பட உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத இதர கடைகளும், மால்களும் திறக்கப்பட்டுள்ளதால்; தற்போது அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here