ஷிவாங்கி பிறந்தநாளில் ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் – நன்றி கூறிய கியூட்டிப்பை!!

0

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஷிவாங்கி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் இணையத்தையே அலறவிட்டனர்.

ஷிவாங்கி:

குழந்தைத்தனமான செயல் மூலமாகவும் இனிமையான குரல் மூலமாகவும் மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் கியூட்டிப்பை ஷிவாங்கி. இவர் அறிமுகமான சூப்பர் சிங்கர் இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவர் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் ஓர் மார்க்கெட்டை ஏற்படுத்திவிட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்துவிட்டார் ஷிவாங்கி. அதன்படி சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் தற்போது ஷிவாங்கி நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஷிவாங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

விருது வேட்டை நடத்தும் குக் வித் கோமாளி அஸ்வின் – வேற லெவல் போங்க!!

மேலும் அவரது ரசிகர்கள் இந்தியா, மலேசிய, இலங்கை ஆகிய நாடுகளில் இவரது பெயரை ட்விட்டரில் ஹேஸ்டேக்காக ட்ரெண்ட் செய்து வந்தனர். இது அனைவரையும் ஆச்சர்யமடைய செய்தது. தற்போது இதனை குறித்து ஷிவாங்கி தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்த ரசிகர்களுக்கும் மேலும் தனது மற்றொரு குடும்பமான மீடியா மேசன்ஸ் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு தனது சிறப்பு நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது இவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here