விருது வேட்டை நடத்தும் குக் வித் கோமாளி அஸ்வின் – வேற லெவல் போங்க!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் அஸ்வின். இதனை தொடர்ந்து தற்போது அவர் விருது வேட்டையை நடத்தி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அஸ்வின்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்னும் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் அஸ்வின். இந்த சீரியலில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதன்பின்பு அவர் நடித்த சீரியல் அனைத்தும் அவருக்கு மிக பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நீண்ட இடைவேளைக்கு பின்பு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரையில் அறிமுகமானார் அஸ்வின்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த நிகழ்ச்சியில் இவர் ஷிவாங்கியுடன் செய்த அலப்பறைகள் அனைத்தும் பார்ப்பதற்கு செம கியூட்டாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் அஸ்வின் அனைத்து தரப்பு மக்கள் மனதில் குடியேறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியில் இவர் பெற்ற வரவேற்பின் காரணமாக தற்போது இவர் விருது வேட்டையினை நடத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

அதன்படி ‘Behindwoods Most Popular Male On Television 2021’ என்ற விருதினை பெற்றார். மேலும் ஷிவங்கியுடன் இணைந்து பெஸ்ட் பேர் என்ற விருதினையும் பெற்றார். தற்போது இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டிற்கான தொலைக்காட்சியின் விரும்பத்தக்க நபர் என்ற விருதினையும் அவர் பெற்றுள்ளார். இதனை பெற்ற அஸ்வின் தனக்கு வாக்களித்த மக்களுக்கும் தனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். மேலும் மீண்டும் ஒரு முறை விஜய் தொலைக்காட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here