கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழகத்தில் பல நடிகைகள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி வந்த நிலையில் தற்போது பாலா பட நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரித்விகா கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.

ரித்விகா:

பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் புதுவிதமாக வெளிவந்த திரைப்படம் தான் பரதேசி. இந்த திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகையாக அவதாரம் எடுத்தவர் தான் ரித்விகா. மேலும் பல படங்களை நடித்த அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகாத நிலையில் மெட்ராஸ் படம் மூலம் மக்கள் மத்தியில் செம ரீச் ஆனார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் சிறந்த துணைநடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின்பு சில நாட்களாக படவாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்ததால் கோலிவுட்டில் இருந்து காணாமல் போகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மீண்டும் அதிரடி கம்பேக் கொடுக்க விரும்பிய ரித்விகா பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டார். மேலும் அந்த போட்டியில் சிறப்பாக பங்காற்றிய ரித்விகா பிக் பாஸ் இரண்டாவது சீசன் டைட்டிலை கைப்பற்றி அசத்தினார்.

எவ்ளோ கியூட்டா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்க பாருங்களே – இணையத்தை கலக்கும் நஸ்ரியாவின் செல்ஃபீ!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் பல முக்கிய நடிகர், நடிகைகள் முக்கிய பிரபலங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும். தற்போது அந்த வகையில் பிக் பாஸ் புகழ் ரித்விகா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here