18,000 ரூபாய் தான்..இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஒற்றை ஆளாக விமானத்தில் ஜாலி பயணம்..!

0

பவேஷ் ஜாவேரி என்ற பயணி விமான டிக்கெட்டுக்கு ரூ .18,000 மட்டுமே கட்டணம் செலுத்தி, மும்பையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தொடர்ந்து அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விதித்த பயணக் கட்டுப்பாடுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர்கள் அல்லது அந்நாட்டின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியும். மே 19 அன்று துபாய்க்கு செல்லவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் பவேஷ் ஜாவேரி என்ற பயணி, இவருக்கு வயது 40. இவர் மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். 360 இருக்கைகள் கொண்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இவர் மட்டும் தனி ஆளாக மும்பையிலிருந்து துபாய்க்கு சென்றுள்ளார். இவருக்கு விருப்ப எண் 18 என்பதால் இருக்கை 18 இல் அமர்ந்து பயணம் செய்ததாக கூறியுள்ளார். இவர் மட்டும் எப்படி அங்கு பயணம் செய்ய அனுமதிக்கட்டார் தெரியுமா??

ஐக்கிய அரபு அமீரகம் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய வகையிலான கௌரவ கோல்டன் விசாக்களை வழங்குகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் கிட்டத்தட்ட அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள். பவேஷ் ஜாவேரி இந்த கோல்டன் விசாவை வைத்துள்ளதால் அவருக்கு எந்த பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. 18,000 ரூபாயில் தனி விமானத்தில் பயணம் செய்த பவேஷ் ஜாவேரியின் இந்த செய்தி இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here