குக் வித் கோமாளி புகழ் குடும்பத்தை பார்த்து இருக்கீங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக அனைவர் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான், நகைச்சுவை நடிகர் புகழ். இவரது அழகான குடும்பத்தினை யாரும் அவ்வளவாக பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களை பற்றி பார்க்கலாம்.

“குக் வித் கோமாளி” புகழ்

விஜய் தொலைக்காட்சியின் மூலமாக பலர் திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது சாதித்து வருகிறார்கள். குறிப்பாக, அவர்கள் அனைவரும் நகைச்சுவை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைத்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் இன்று பெரும் வரவேற்பினை பெற்றவர் தான், “குக் வித் கோமாளி” புகழ்.

கடவுள் சொன்னதாக சொல்லி பாட்டியை கல்லால் அடித்து கொன்ற சிறுவன் – ஆன்லைன் விளையாட்டால் வந்த விபரீதம்!!

இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “அது இது எது” நிகழ்ச்சியில் ராமருடன் சேர்ந்து நகைச்சுவை செய்து வந்தார். இவர்களது கூட்டணியினை இன்று வரை யாராலும் அடித்து கொள்ள முடியாது. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியினை போல் செய்து காட்டினர். அதில் புகழ் பாதிக்கப்பட்ட பெண்ணாக வருவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நகைச்சுவையின் மூலமாக தான் இவர் மிகவும் பிரபலம் அடைந்தது. இதன் பிறகு இவர் “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் நடிகை ரம்யா பாண்டியனை ஒரு தலையாக காதலித்து வந்தார். அந்த நிகழ்ச்சியில் தனது எதார்த்தமான நகைச்சுவைகள் மூலமாக தனக்கு என்று ஒரு தனி முத்திரையினை பதித்தது கொண்டார்.

இப்படியாக புகழ் இருந்தாலும் அவர் தானாக இந்த துறையில் முன்னேறி வந்துள்ளார். அவர் மிகவும் நடுத்தர குடும்பத்தினை சேர்ந்தவராம். கடினமான சூழ்நிலையில் இருந்து தான் புகழ் தற்போது முன்னேறி வந்துள்ளார். இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை உள்ளனர். தற்போது அவர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here