இந்தியாவில் இப்படி ஒரு இடமா?? வியக்கவைக்கும் அதிசய பாலம்!!

0

நம் நாட்டில் பல சிறந்த இடங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடங்கள் நீக்கத்தை இடத்தை பிடித்திருக்கும். அந்த வகையில் பிரமிப்பூட்டும் வகையில் மேகாலயாவில் ஒரு இடம் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவில் காண்போம்.

மேகாலயா:

நாட்டில் ஒரு சில இடங்களில் மக்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சில நிகழ்வுகள் மற்றும் சில விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் மக்களுக்கு முழுவதுமாக தெரிந்துவிடுவது அல்ல. அந்த வகையில் ஒன்று தான் மேகாலயா பகுதியில் ஒரு வேர்ப்பாலம். இப்படி ஒரு பாலம் உண்டு என்பது இங்குள்ள சிலருக்கு தெரியாது. ஆனால் இந்த பாலம் பல சிறப்பு தன்மையை கொண்டது. தற்போது அதனை பற்றி விரிவாக காண்போம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுபோல் உள்ள பாலங்களை மேகாலயா பகுதியில் உள்ள காசி மற்றும் ஜெயந்தியா பகுதியில் உள்ள மக்கள் அமைத்து வருகின்றனர். இவர்கள் பாலம் அமைக்கும் இடங்களுக்கு சென்று அந்த பகுதியில் உள்ள வளைந்து கொடுக்கும் மர வேர்களை முறுக்கி மறுபக்கம் வரை கொண்டு சென்று பாலம் அமைப்பதற்கான வேளைகளில் ஈடுபடுவர். மறுபக்கம் வரை செல்லும் வேர் அங்கு மண்ணில் செலுத்தப்பட்டு அது தொடர்ந்து வளர்ந்து வரும். இதுபோன்ற பாலங்களை அமைப்பதற்கு சுமார் 15 ஆண்டுகள் அவரை ஆகுமாம்.

9 வருடத்திற்கு முன்பு இதே தினத்தில் நிகழ்ந்த சோகம் – மெமரிஸ் பிரிங் பேக்!!

இந்த உயிர் உள்ள வேர்ப்பாலம் தடிமன் அதிகரிக்க அதிகரிக்க இந்த பாலம் மிக வலிமை மிக்கதாகும். இந்த பாலம் 50 பேர் வரை தாங்குமாம். மேலும் 30 மீட்டர் நீளம் மற்றும் 500 ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்து நிற்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வகையான வேர்ப்பாலம் மேகாலயா பகுதியில் உள்ள கிழக்கு காசி மலை பகுதியில் உள்ளது. அங்கு இரட்டை வேர் பாலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொங்தோங் அருகிலும் ஓர் வேர்ப்பாலம் உள்ளது. தற்போது இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here