குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டு ரவுண்டு – ஜெயிக்கப்போவது யாரு??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு சுற்றுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.

குக் வித் கோமாளி

மக்கள் மத்தியில் தற்போது அளவுக்கதிகமான ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. எப்பொழுது வீக் எண்டு வரும் என்று பலரும் தவம் கிடைப்பதற்கு ஒரு காரணமும் இந்த நிகழ்ச்சி தான். குக் வித் கோமாளி சீசன் 2 தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

முந்தைய சீசனை விட இது டாப் ரேட்டிங் தான். அஸ்வினுக்கு இந்த நிகழ்ச்சி அவரது கேரியருக்கு பெரிய பாலமாக அமைந்தது. தற்போது அஸ்வின் பற்றிய பேச்சு தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பல பெண்களும் அஸ்வினுக்கு வலை வீசி தான் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது குக் வித் கோமாளியின் அரை இறுதி சுற்று நடைபெற்ற நிலையில் அஸ்வின், கனி மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் இறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். இந்நிலையில் இந்த வாரத்தில் வைல்ட் கார்டு சுற்று நடைபெற்றுள்ளது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

வழக்கம் போல பல அன்லிமிடெட் கலாட்டாக்களுடன் வெளியாகியுள்ளது. இந்த இதில் தீபா, சகிலா, பவித்ரா, தர்ஷா போன்றோர் போட்டியிடுகின்றனர். இதில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. ஆனால் இந்த தடவை பவித்ராவுடன் புகழ் தான் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here