‘ப்ளீஸ் குக் வித் கோமாளியை நிறுத்திடாதீங்க’ – கதறும் ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதி செமி-பைனல் ரவுண்டு நடக்கவுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி முடிய போகிறது என்ற வருத்தத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியும் ஒன்று. பல கலாட்டாக்களுடன் வாராவாரம் வெளியாகும் இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றை நெருங்கியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரமும் ஷிவாங்கி அஸ்வினுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இதுவே பலருக்கு குஷி தான்.

கதாநாயகிகளில் ரோலில் கோமாளிகள் கெட்டப் போட்டு வந்துள்ளனர். அதில் ஷிவாங்கி கஜினி படத்தின் அசின் வேடத்தில் வருகிறார். அசின் சொல்லும் அதே டயலாக், ஷிவாங்கி இதனை பேசியது பலரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தனது அழகான குழந்தை மொழியில், சென்னை ஏர்போர்ட்ல தான் அவனை பாத்தேன், ஹாய் சொன்னான் நானும் ஹாய் சொன்னேன், பேச ஆரம்பிச்சான் பாருங்க விடவே இல்லை என்று சொல்ல அஸ்வினுக்கே இது அதிர்ச்சி தான்.

அடுத்ததாக சாரி அஸ்வினே என்று பாவமாக சொல்லும் ஷிவாங்கிக்கு பல லைக்ஸ் தாராளமா போடலாம். இந்த வாரத்தில் செமி-பைனல் வேறு நடக்கவுள்ளது. என்ன தான் கலாட்டாக்களுடன் ப்ரோமோ வெளியானாலும் பலரும் இது முடியப்போகிறது என்ற சோகத்தில் மூழ்கியுள்ளனர். இத்தனை நாட்கள் மக்களின் சிரிப்புக்கு காரணமாக இருந்த இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிய போகிறதா?? கதறியும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here