ஆண்டவர் இல்லாத பிக் பாஸ் எப்படி இருக்கும்?? இனி தொகுத்து வழங்க போவது இந்த நடிகர்தானாம்!!

0

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஷோ தான். இனி வரும் சீசனை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற செய்தி காட்டு தீயை பரவி வருகின்றது.

தமிழ் பிக் பாஸ்

இன்றைய காலகட்டத்தில் என்ன தான் நமக்கு போன் போன்ற நவீன சாதனங்கள் வந்திருந்தாலும், நமக்கு தொலைக்காட்சியின் மேல் உள்ள மோகம் என்றும் குறைவதில்லை. இதன் காரணமாக, தொலைகாட்சிகள் அனைத்தும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சி தான்.

அடேங்கப்பா 331 கோடியா?? தேர்தல் அதிகாரிகளின் தீவிர சோதனையில் சிக்கிய ரொக்கம்!!

இதனை அடுத்து அந்த நிகழ்ச்சி முதன் முதலாக ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வந்தார். ஹிந்தியில் தற்போது 14 சீசன்கள் முடிந்து விட்டன. தமிழில் “உலக நாயகன்” கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெற்றிகரமாக 4 சீசன்கள் இந்த நிகழ்ச்சியில் முடிந்து விட்டது.

இதனை அடுத்து கமல் ஹாசன் அரசியலில் தனது கவனத்தினை செலுத்தி வருவதால் அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தான் இனி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியினை பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ஆய்வு செய்யும் இம்தாப் உறுதி செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் சுவாரசியம் என்னவென்றால், ஏற்கனவே நடிகர் சிம்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நிகழ்ச்சியில் நடிகர் பாப்லுவிருக்கும் இவருக்கு ஏற்பட்ட சண்டையால் விலகினார் என்பது தான். தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினால் கண்டிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு எகிறும் என்று நம்பப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here