ஹிந்தி படத்துக்கே நோ சொன்ன விஜய் சேதுபதி – அவ்வளோ பிஸியா நீங்க??

0

பாலிவுட் துறையின் “சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படும் அமீர் கானுடன் தான் நடிக்க இருந்தாராம் விஜய் சேதுபதி. ஆனால், அந்த வாய்ப்பினை லாவகமாக சமந்தாவின் கணவர் நாக சைதன்யா தட்டி தூக்கி விட்டாராம். இதனால் சேதுபதி ரசிகர்கள் கண்டாகி உள்ளனர்.

விஜய் சேதுபதியின் படவாய்ப்பு

நடிகர் விஜய் சேதுபதியை போல் ஒரு நடிகரை தமிழ் திரைத்துறை இதுவரை கண்டதில்லை. காரணம், ஒரு நடிகர் தனக்கு நடிகர் என்ற இமேஜ் வந்து விட்டால் அதில் இருந்து வர மாட்டார். அவர் தேர்வு செய்யும் கதைகளும் அவரது இமேஜினை பாதிக்காதபடி தான் இருக்கும். இப்படியாக இருக்க, நடிகர் விஜய் சேதுபதி மட்டும் தான் ஒரு படத்திற்கு ஹீரோவாக நடித்தாலும் கூட தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்று இருந்தால் அதனை சிறப்பாக செய்து தனக்கு என்று ஒரு ஸ்டைலினை உருவாக்கி கொண்டார்.

அடேங்கப்பா 331 கோடியா?? தேர்தல் அதிகாரிகளின் தீவிர சோதனையில் சிக்கிய ரொக்கம்!!

குறிப்பாக சொல்ல வேண்டும் என்று கூறினால், இவர் “விக்ரம் வேதா” திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்திருந்தார். அதே போல் தற்போது “மாஸ்டர்” திரைப்படத்தில் பாவனி என்ற கதாபாத்திரத்தில் தனது அக்மார்க் நடிப்பின் மூலமாக அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளார். இப்படியாக இருக்க இவர் பாலிவுட் ஜாம்பவான் அமீர் கானுடன் “லால் சிங் சட்டா” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தின் மூலமாக இவர் ஹிந்தி திரையுலகில் என்ட்ரி கொடுக்க இருந்தார். இந்த தகவல் பொது முடக்கத்திற்கு முன்பே உறுதியாகியது. இந்த திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி உடல் எடையினை கூட குறைக்க இருந்தாராம். ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தால் இவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இப்படியாக இருக்க, இந்த வாய்ப்பினை சமந்தாவின் கணவரான நாக சைதன்யாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமீர் கானின் படத்தில் அவருக்கு நண்பராக நடிக்க உள்ளார். அதே போல் இந்த படத்தின் மூலமாக நாக சைதன்யா முதல் ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here