குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் புதிய ஆல்பம் சாங் மேக்கிங் போட்டோஸ் – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாகி ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் ஷார்ட் பிலிம் எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஸ்வின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அஸ்வின். இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர். கோயம்புத்தூரில் இருந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவர்.

பல முயற்சிகளுக்கு பிறகு தான் ஷார்ட் பிலிம்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அஸ்வினுக்கு அப்பொழுதே சில ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆனால் அது பேசும்படியாக இருந்ததில்லை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த அடுத்த வாரமே அவருக்கு பெயரும் புகழும் அள்ளியது. பாதி எபிசோடு போய்க்கொண்டிருக்கும் போதே 1 மில்லியன் பாலோவர்ஸை பெற்றார்.

அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. இடையில் அவர் நடித்த குட்டி பட்டாஸ் பாடல் கூட மில்லியன் வியூஸ் தாண்டியது. இந்நிலையில் அவர் நடிக்கும் ஆல்பம் சாங் மேக்கிங் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here