மீண்டும் பிரமாண்டமாக உருவாகும் குக் வித் கோமாளி – வைரலாகும் ஷூட்டிங் ஸ்டில்ஸ்!!

0

விஜய் டிவியில் தற்போது புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பவுள்ளது. அதற்கான புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி வரும் நிலையில் குக் வித் கோமாளி செலிப்ரேஷன் தான் என்று பலரும் யூகித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி செலிப்ரேஷன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தது. சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்த புதிய கான்செப்ட்டில் உருவாக்க அது ஏக வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் பிக் பாஸ் வனிதா, உமா ரியாஸ், ரேகா, ரம்யா பாண்டியன் போன்றோர் கலந்துகொண்டனர்.

ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தான்.

முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மாஸ் ஹிட். ஷிவாங்கி, அஸ்வின் அலப்பறைகள் தான் இந்த சீசன் முழுவதும் பேசப்பட்டது. அஷாங்கி என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இப்பொழுது இந்த இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட அனைவர்க்கும் தற்போது நல்ல வரவேற்பு பெற்று படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே குக் வித் கோமாளி பிரபலங்களின் புகைப்படம் தான். மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 செலிப்ரேஷன் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு சான்றாக ஷிவாங்கி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது பாபா மாஸ்டர் புகழ் இணைந்து ஒரு EVP செட் வாசலில் நடனமாடுவது போலவும், ஷிவாங்கி பாலா, புகழ் நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. ஏனெனில் அதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளதால் இது செலிப்ரேஷனாக தான் இருக்கும் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here