இன்னும் இத்தனை வாரங்களில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும்.. தலைமை மருத்துவர் அதிர்ச்சி தகவல்!!!

0

கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது. இன்னும் 6 முதல் 8 வாரங்களில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என்ற அதிர்ச்சி தகவலை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

உலகை புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. அரசு அறிவித்த ஊரடங்கினாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதாலும் தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. அனாலும், கொரோனா மூன்றாம் அலைகுறித்த பயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக தகவல் வந்த நிலையில், இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. மேலும் இரண்டாம் அலையின் தாக்கத்தைவிட மூன்றாம் அலையால் ஏற்படும் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும் என்று ஆராச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறியதாவது, இந்தியாவில் மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது. இன்னும் 6 – 8 வாரங்களில் மூன்றாம் அலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அறிவிக்கப்படும் ஊரடங்கு தளர்வுகளால் நிலைமை இன்னும் மோசமாகும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here