இந்தியாவின் டாப் 5 நிறுவனங்களின் அசத்தலான ஜாப் ஆஃபர்… 1,38,000 புதிய வேலைவாய்ப்புகள்!!!

0

இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளில் ஒன்று குறைவான வேலை வாய்ப்புகள். அதும் இந்த கொரோனா காலத்தில் ஏற்கனவே வேலையில் இருந்த பலபேர் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது குட் நியூஸ் என்னவென்றால் இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.

ஊரடங்கு காலத்திலும் எவ்வித தொய்வும் இன்றி நடைபெறும் துறைகளில் ஒன்று வங்கி துறை மற்றொன்று ஐடி துறை. தற்போது இந்த ஐடி துறையின் தலைமை அமைப்பான நாஸ்காம், இந்தியாவின் மிக முக்கியமான ஐந்து ஐடி நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் சுமார் 96000 வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளதாக ஒரு அட்டகாசமான அறிவிப்பை விடுத்துள்ளது.

நாஸ்காம் தெரிவித்த இந்த ஐந்து ஐடி நிறுவனங்கள் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎஸ், காக்னிசென்ட் ஆகியவை ஆகும். மேலும் நாஸ்காம் தெரிவித்தாவது, இந்த ஆண்டில் ஐடி துறையில் கிட்டத்தட்ட 1,38,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு இந்திய ஐடி துறையில் 1,38,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதும் மேலும் நடப்பு நிதியாண்டிலேயே 96000 வேலைவாய்ப்புகளை இந்திய ஐடி நிறுவனங்கள் வழங்க இருப்பதாக நாஸ்காம் அறிவித்துள்ளது வேலைதேடுபவர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here