என்னது., நம்ம விஜய் டிவி தீனாவுக்கு திருமணம் முடிஞ்சிருச்சா., பொண்ணு இவங்க தானா??

0
என்னது., நம்ம விஜய் டிவி தீனாவுக்கு திருமணம் முடிஞ்சிருச்சா., பொண்ணு இவங்க தானா??
என்னது., நம்ம விஜய் டிவி தீனாவுக்கு திருமணம் முடிஞ்சிருச்சா., பொண்ணு இவங்க தானா??

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டனர் தான் தீனா. இவர் stand up காமெடி செய்வதிலும், டைமிங்கில் கவுண்டர் கொடுப்பதிலும் கில்லாடி என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி காமெடி ஷோக்கள், award நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் வெள்ளி திரையிலும் களமிறங்கி அசத்தி வருகிறார்.லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் திரைக்கு வந்த கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் தனது சொந்த ஊரான திருவாரூரில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளார். அதன் கிரகப்பிரவேச புகைப்படங்களை இன்ஸ்டா பக்கங்களில் ஷேர் செய்திருந்தார் .இதை தொடர்ந்து இவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் நட்பு வட்டாரங்களுக்கு கால் செய்தும், whatsappபில் திருமணம் பத்திரிகையையும் அனுப்பியிருக்கிறேன்.

பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி தான் திறக்கப்படும்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

திருவாரூரில் என் திருமணம் நடக்க இருப்பதால் அடுத்த வாரம் சென்னையில் வரவேற்பு விழா வைக்க ஏற்பாடு செய்துள்ளேன். மேலும் இந்த திருமணம் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது எனவும், இவரது மனைவி ஒரு கிராபிக் டிசைனர் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று (ஜூன் 1 ) இவரது திருமணம் திருவாரூரில் நடந்து முடிந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட இவரது ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here