மீண்டும் இந்தியாவில் கால் தடத்தை பதிக்கும் பப்ஜி – கொண்டாட்டத்தில் இளைஞர்கள்!!

0

இந்தியாவில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு தற்போது மீண்டும் இந்தியாவிற்கு வரவுள்ளது. இதன் காரணமாக தற்போது இளைஞர்கள் உற்சாகமடைந்த வருகின்றனர்.

பப்ஜி:

இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பப்ஜி. இந்த விளையாட்டில் அனைத்து வயது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூழ்கி கிடந்தனர். மேலும் இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கத்தின் பொழுது இளைஞர்களுக்கு டைம் பாஸ் என்றால் அது பப்ஜி கேம் தான்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ பப்ஜி கேமினை தவறாமல் விளையாடி வருவார்கள். அந்த அளவிற்கு இந்த கேம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு பப்ஜி உட்பட 117 சீன நாட்டு செயலிகளை தடை செய்தது. பப்ஜி கேம் தடை செய்யப்பட்டதால் இளைஞர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

மீண்டும் இந்தியாவில் பப்ஜி கேம் நடைமுறைக்கு வராதா என்று அனைவரும் ஏங்கி வந்த நிலையில் தற்போது அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஓர் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி கொரிய நாட்டு நிறுவனமான கிராஃப்டன் நிறுவனம் இந்தியாவில் பப்ஜி கேமினை களமிறக்கப்போவதாக அறிவித்தது. மேலும் அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது தற்போது இந்த தகவலினால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here