நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் யுனிவர்சல் பாஸ் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

கிரிக்கெட் உலகின் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கேல் தற்போது நமது நாட்டு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதற்கான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறிஸ் கேல்:

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தான் கிறிஸ் கேல். இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர். இவர் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். இவர் ஐபிஎல் தொடரில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு தற்போது 41 வயதானாலும் இவரது ஆட்டத்திற்கு வயதாகவில்லை என்று தான் சொல்லவேண்டும். இவரது பேட்டில் பந்து பட்டுவிட்டால் பந்து கண்டிப்பாக சிக்சருக்கு பறக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கிரிக்கெட் ரசிகர்கள் இவரை யுனிவர்சல் பாஸ் என்றும் அழைத்து வருவார்கள். தற்போது அனைத்து இடங்களிலும் கொரோனா பரவுவதால் அனைத்து நாட்டிலும் அதற்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரது சொந்த நாடான ஜமைக்கா நாட்டுக்கு தற்போது இந்திய அரசு கொரோனவிற்கான தடுப்பு மருந்தை வழங்கியுள்ளது.

#INDvsENG ஒருநாள் தொடர் – இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!!

இது அந்த நாட்டு மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் நன்றியை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கேல் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்ததற்கு நமது நாடிகரும் மற்றும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மற்றும் இந்தியா மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது அதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிரது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here