இயக்குனர் ஹரிக்கு திடீர் உடல்நிலை குறைவு – மருத்துவமனையில் அனுமதி!!

0
hari

தமிழ் திரைப்படங்களின் அதிரடி கதைகளில் வல்லவரான இயக்குனர் ஹரி தீவிர காய்ச்சல் காரணமாக தற்போது பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் ஹரி

48 வயதான இயக்குனர் ஹரி அதிரடியான கமர்சியல் திரைப்படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர். ‘தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் இயக்குனராக அவதாரம் எடுத்தார் ஹரி. தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ‘சாமி’, ‘அருள்’, நடிகர் சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, நடிகர் விஷாலை வைத்து ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ஹரி. இயக்குனர் ஹரி நடிகர் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாட்டு பொண்ணுங்களோட மாமியாரா?? வைரலாகும் அஸ்வின் அம்மாவின் புகைப்படம்!!

தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வரும் ஹரிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஹரியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை நெகட்டிவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here