#INDvsENG ஒருநாள் தொடர் – இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!!

0

டி 20 தொடர்கள் தற்போது முடியப்போகும் நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்ததாக ஒரு நாள் தொடரை விளையாடவுள்ளனர். தற்போது அதற்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற நிலையில் தற்போது டி 20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த தொடர் யார் வெல்ல போகிறார் என்பதை முடிவு செய்யும் கடைசி போட்டி நாளை துவங்க இருக்கிறது. மேலும் நாளையுடன் டி 20 தொடர் முடியவிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக இந்த இரு அணிகளும் ஒரு நாள் தொடரை விளையாடவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG டி 20 – ‘கண்ண எங்க வச்சிருக்கீங்க?? நடுவர்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

இந்த இரு அணிகளுக்குமான ஒரு நாள் தொடர் வருகிற 23ம் தேதியுடன் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் மிக கடுமையாக விளையாடும். காரணம் இந்தியாவை வீழ்த்தும் நோக்கில் இங்கிலாந்தும், சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்தியாவும் களமிறங்கவுள்ளதால் இந்த போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதில் விளையாடப்போகும் இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோஹ்லி(C), ரோஹித் சர்மா (VC), தவான், கில், ஷ்ரேயஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ரிஷாப் பாண்ட்(WC), கே.எல்.ராகுல்(WC), ஹர்டிக் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், தாகூர், பிரசித் கிருஷ்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here