நீல நிற உடையில் ரசிகர்கள் கண்கவரும் சித்தி 2 சீரியல் நடிகை – இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படம்!!

0

சீரியல் நடிகைகள் அனைவரும் தற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் ரசிகர்களை கவரும் வகையில் பல வித புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது சித்தி 2 சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் தனது அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ப்ரீத்தி சர்மா:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப நாடக தொடர் தான் சித்தி 2. இந்த சீரியலின் முதல் பகுதி கடந்த 1999ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நிழல்கள் ரவி, ராதிகா சரத்குமார், ப்ரீத்தி சர்மா போன்றவர்கள் நடித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் ப்ரீத்தி சர்மா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லலாம். இவர் இதற்கு முன்பு திருமணம் என்னும் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் எதார்த்த நடிப்பு மூலம் இல்லத்தரசிகளை கவர்ந்தார். மேலும் தற்போது சில காலமாக இவர் இணையத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார் ப்ரீத்தி சர்மா.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஷிவாங்கி பிறந்தநாளில் ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் – நன்றி கூறிய கியூட்டிப்பை!!

ஊரடங்கு காலமாக படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் தினமும் ஓர் புகைப்படம் அல்லது ரீல்ஸினை இணையத்தில் வெளியீட்டு வருகிறார். இது இளைஞர்கள் அனைவரும் கவரும் வகையில் இருக்கிறது. சீரியல்கள் மூலம் பெண் ரசிகர்களை சேர்த்த ப்ரீத்தி இணையம் மூலம் ஆண்கள் ரசிகர்களையும் சேர்த்துள்ளார். அந்த வகையில் தற்போது நீல நிற உடையில் ரசிகர்கள் கண்கவரும் வகையில் ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here