கைத்தறி துறை செயலாளராகிறார் பீலா ராஜேஷ்… திடீர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!!

0

தமிழகத்தில் வணிக வரித்துறை செயலாளராக பதவி வகித்தவர் ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ், தற்போது தமிழக அரசு இவரை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக நியமித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து அரசு வெளியிட்ட தகவலில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பதவி வகித்து வரும் பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் நெசவு துறைக்கான முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்படுகிறார். தமிழ்நாடு தொழில் முதலீடுகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பதவி வகிக்கும் சிகி தாமஸ் வைத்தியன் தொழில்துறை வணிகம் துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கபட்டுள்ளது.

பல ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் தற்போது தமிழக அரசால் மாற்றம் செய்யப்படுகின்றனர். நேற்று வரை தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் சில துறை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பீலா ராஜேஷ், அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பதவி வகித்தவர். பின்னர்  ராதாகிருஷ்ணன் அப்பதவிக்கு கொண்டுவரப்பட்டார். இதையடுத்து பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது இவர் கைத்தறித் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here