தளபதி விஜய்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு இப்படி ஒரு கனெக்சனா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலேயே ஜீவாவின் கதாபாத்திரம் தான் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் மூர்த்திக்கு குடும்பத்திற்கு ஏற்ற அடக்கஒடுக்கமான மருமகள். அதே போல தான் கதிருக்கு. ஆனால் ஜீவாவுக்கு அந்த கொடுப்பணை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் மீனா செய்யாத அட்டகாசங்களே கிடையாது. எதற்கு எடுத்தாலும் எதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். எதுவுமே அவருக்கு நிறைவை தராது. அப்படி பட்ட மீனாவை சமாளிப்பவர் தான் ஜீவா. குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு மீனாவை சமாளிப்பது பெரிய சவால் தான்.

அந்த கதாபாத்திரத்தில் தான் சிறப்பாக நடித்து வருகிறார் வெங்கட். இந்த சீரியல் தான் அவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது. மேலும் ஜீவாவும் பல ரசிகர்களின் கனவு நாயகன் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு திருமணம் ஆகி 1 குழந்தையும் உள்ளது. ஆனாலும் வயது தெரியாமல் இளமையாகவே உள்ளார். தற்போது அவர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here