Sunday, May 19, 2024

இந்தியாவில் சீன முதலீடு 12 மடங்கு அதிகரிப்பு – சர்வதேச தொழில் ஒப்பந்தங்கள் தகவல்..!

Must Read

சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சீன நிறுவனங்களின் முதலீடு 12 மடங்கு உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லடாக் பிரச்னை:

கடந்த சில நாட்களுக்கு முன்னால் லடாக் எல்லையில் நமது ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் நமது ராணுவத்தில் 20 வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Ladakh problem
Ladakh problem

அதனால் மக்கள் அனைவரும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வர்த்தக ரீதியாக எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று பல தரப்பிலும் எதிர்ப்பு குரல் எதிரொலித்தது.இதனால் சில சீன நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது, ஆனால், அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஸ்டார்ட் அப் முதலீடு:

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சீன முதலீடுகள் 12 மடங்கு அகா உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளி ஆகி உள்ளது. சர்வதேச தொழில் ஒப்பந்தங்கள் கொடுத்து உள்ள தகவல்களின் படி, 2016ல் 38.1 கோடி டாலராக மட்டுமே இருந்த சீன முதலீடு 2019ம் ஆண்டில் 460 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதன்படி பார்த்தால் சீன முதலீடுகள் நம் வர்த்தகத்தில் வேரூன்றி உள்ளது.

மேலும் ஒரு திமுக எம்எல்ஏ.,விற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் உள்ள 24 முன்னணி நிறுவனங்களில் சீனாவின் பெரு நிறுவனங்கள் பல கோடி டாலர்களை முதலீடு செய்து உள்ளது. குறிப்பாக அலிபாபா மற்றும் டென்செண்ட் நிறுவனங்கள் மிகுந்த பங்கு வகிக்கின்றது.

india china investment
india china investment

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அலிபாபா நிறுவனம் 260 கோடி டாலர்களை பேடிஎம், ஸ்னாப்டீல், பிக்பேஸ்கட், சொமாட்டோ போன்றவற்றில் முதலீடு செய்து உள்ளது. டென்செண்ட் நிறுவனம் 240 கோடி டாலர்களை ஓலா, ஸ்விகி, ஹைக், ட்ரீம்11, பைஜூஸ் ஆகியவற்றில் முதலீடு செய்து உள்ளது.

China shares
China shares

இது மட்டும் அல்லாமல் டிடி சுஷிங், மெய்துவான் டியன்பிங், போசன், ஷுன்வே கேபிடல், ஹுல்ஹவுஸ் கேபிடல் குரூப், சீனா லாட்ஜிங் குரூப் போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -