இறுதிக்கட்டத்தில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை, நவம்பரில் வெளியீடு – சீனா அறிவிப்பு!!

0

சீனாவில் தயாரிக்கப்பட்ட 3 கொரோனா தடுப்பூசிகள் மனித பரிசோதனை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவத் தொடங்கியது. இதனை திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கி பரப்பியதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. ஏனென்றால் முதல் முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவை விட அமெரிக்கா, இந்தியா, இத்தாலி உட்பட பல நாடுகளில் மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டன. இது குறித்த விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சீனாவில் கொரோனா பரவல் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த 4 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டத்தில் உள்ளன. அவற்றில் ஏற்கனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகால பயன்பாட்டு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் சீராக நடந்து கொண்டிருக்கின்றன, நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு தயாராக இருக்கக்கூடும் என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!!

மருந்து நிறுவனமான சினோபார்ம் மற்றும் சினோவாக் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அவசரகால பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன. மேலும் கன்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய நான்காவது COVID-19 தடுப்பூசி ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here