அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!!

0
மருத்துவர்
மருத்துவர்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத காரணத்தால் அவர்களின் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறைவேறாமல் போகிறது. மேலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் விரும்பிய கல்லூரியில் சீட் கிடைக்காத சூழ்நிலையும் நிலவுகிறது. இதனால் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

medical college
medical college

முன்பாக நீட் தேர்வு தற்கொலைகள் குறித்து எதிர்க்கட்சி தெரிவித்த கருத்திற்கு முதல்வர் சரமாரியான கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில் முதல்வர் தாக்கல் செய்த இடஒதுக்கீடு மசோதாவிற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளது.

1.30 மணிநேரம் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வு – சென்னை பல்கலை அறிவிப்பு!!

இந்த புதிய சட்டமசோதா மூலம் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதில் நீதியரசர் கலையரசன் குழு 10% ஒதுக்கக்கோரி பரிந்துரைத்து இருந்த நிலையில், அரசு 7.5% இடம் ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here