தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வேலூர், திருப்பத்தூர் உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உளளதாக சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

rain
rain

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் 3 செமீ, தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 2 செமீ, சேலம் மாவட்டம் ஆத்தூரில் 2 செமீ மழையும் பதிவாகி உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை தூத்துக்குடியில் 36.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஊட்டியில் குறைந்தபட்சமாக 17.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியுள்ளது.

1.30 மணிநேரம் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வு – சென்னை பல்கலை அறிவிப்பு!!

இன்று முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல், வங்காள வளைகுடா மற்றும் ஆந்திர மாநில கடல் பகுதிகளில் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here