மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதியில்லை – மத்திய அரசு திட்டவட்டம்!!

0
Central Govt
Central Govt

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைவாக இருக்கும் காரணத்தால், மாநிலங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க போதிய நிதியில்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.11,700 கோடி வழங்கப்படாது என கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி இழப்பீடு தொகை:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் இயங்காத காரணத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வசூலில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் பல மாநில அரசுகள் அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினை பிடித்தம் செய்தன. மேலும் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வருவாய் இழப்பை சமாளிக்க ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து இருந்தன. இந்நிலையில் மாநிலங்களவையில் இதற்கு மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை வழங்க அரசிடம் போதிய நிதியில்லை தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஊரடங்கு காலத்தில் குறைவாக இருக்கும் காரணத்தால் நிதி இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இறுதிக்கட்டத்தில் 3 தடுப்பூசிகள் பரிசோதனை, நவம்பரில் வெளியீடு – சீனா அறிவிப்பு!!

மாநில அரசுகளுக்கு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு இழப்பீடு தொகையாக மத்திய அரசு சார்பில் 1.51 லட்சம் கோடி ரூபாய் தரவேண்டி உள்ளது. அதிலும் தமிழகத்திற்கு மட்டும் ரூ.11,700 கோடி வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு ரூ.511.64 கோடி இதுவரை வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here