யம்மியான “சிக்கன் நெய் ரோஸ்ட்” – செஞ்சு தான் பாருங்களேன்!!

0

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இதனை அடுத்து இன்று ஸ்பெஷல் ரெசிபியான “சிக்கன் நெய் ரோஸ்ட்” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 500 கிராம்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • தயிர் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 10
  • சீரகம் – 3 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 3 டீஸ்பூன்
  • மிளகு – 2 டீஸ்பூன்
  • மல்லி – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 10
  • புளி – சிறிய எலுமிச்சைபழ அளவு
  • நெய் – 4 டீஸ்பூன்
  • வெல்லம் – 1 டீஸ்பூன்
  • கருவேப்பில்லை – தேவையான அளவு

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி & பூண்டு விழுது உப்பு மற்றும் சிக்கன் ஆகியவற்றை போட்டு நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும். ஒரு மணி நேரம் இதனை அப்படியே வைத்து கொள்ள வேண்டும். அதற்கு பின்பாக, ஒரு சட்டியினை காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், மிளகு, மல்லி, சோம்பு ஆகியவற்றை நன்றாக வறுத்து கொள்ளவும்.

குக் வித் கோமாளியின் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

நன்றாக மணம் வரும் வரை வறுத்து விட்டு அதனை ஆற விட வேண்டும். பின், மிஸ்சியில் இதனை போட்டு இத்துடன் புளி, பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். மை போல அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு சட்டியினை காய வைத்து அதில் எடுத்து வைத்துள்ள நெய் சேர்த்து அதில் சிக்கனை போட்டு நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் அதில் எடுத்து வைத்துள்ள கலவையினை சேர்க்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கலவையில் வெல்லம் சேர்த்து அதனை நன்றாக கிண்டி விட வேண்டும். பின், இதில் சிக்கனை போட்டு வதக்க வேண்டும். மசாலா சிக்கனில் படும்வரை கிண்டி விட்டு, கடைசியாக கருவேப்பிலை சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். அவ்ளோ தான்!!

சூடான “சிக்கன் நெய் ரோஸ்ட்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here