குக் வித் கோமாளியின் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

0
எதிர்பாராத நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த சீசனில் கடைசியாக அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அதாவது பைனல்ஸ் முடிந்துள்ள நிலையில் கனி தான் ஜெயித்துள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசன் தான் சக்கை போடு போட்டது. அஸ்வின், பாபா மாஸ்டர், கனி, ஷகிலா என பட்டையை கிளப்பினர்.

பாபா மாஸ்டரின் காமெடி, சுறுசுறுப்புக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அதே வேளையில் சமையலிலும் பின்னி விடுவார். ஆன் தி ஸ்பாட்டில் என்ன ரெசிபி சொன்னாலும் செஞ்சு அசத்தி விடுவார். இப்படி பல கலாட்டாக்களுடனேயே குக் வித் கோமாளி நகர்ந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது பலரையும் கவலைக்குள்ளாகியுள்ளது.

நமக்கே இப்படி இருந்தால் இத்தனை நாட்கள் ஜாலியாக என்ஜாய் செய்த அவர்களுக்கு எப்படி இருக்கும்?? தற்போது செட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கண்கலங்கியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here