நாவூறும் சுவையுடன் “கோழி உப்பு கறி” – செஞ்சு தான் பாருங்களேன்!!

0

அசைவ பிரியர்களுக்கு சிக்கனை வித விதமாக சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இன்று கிராமத்தில் செய்யும் “கோழி உப்பு கறி” ரெசிபி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2 கிலோ
  • மிளகு – 3 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
  • காய்ந்த வத்தல் – 10
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பட்டை – 2 அல்லது 3
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • பூண்டு – 5 அல்லது 6
  • சின்ன வெங்காயம் – 1 கப்
  • தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில், சிக்கனை எடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கிளறி வைக்கவும். இத்துடன் உப்பையும் சேர்க்க வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பின், அதில் காய்ந்த வத்தல், கடுகு, உளுந்து, வெந்தயம், பட்டை, சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின், இதனை நன்றாக கிளறி விடவும்.

தனுஷின் மூன்றாவது ஹிந்தி பட படப்பிடிப்பு நிறைவு – ரிலீஸ் தேதிக்காக ஆவலில் ரசிகர்கள்!!

பின்பு, இதில் வெங்காயம் , பூண்டு சேர்த்து கிண்டி விடவும். இவை பொன்னிறமாக மாறியதும் இதில் தக்காளி சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக கிளறி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொதித்ததும், அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் சிக்கனை போட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிக்கனை போட்டு நன்றாக கிளறி விட்டு கொண்டே இருக்க வேண்டும். நன்றாக சிக்கன் வெந்ததும் கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிண்டி விட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறலாம். அவ்ளோ தான்!!

                               நாவூறும் சுவையுடன் “கோழி உப்பு கறி” தயார்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here