தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
A pedestrian walks with an umbrella as lightning strikes during an evening thunderstorm in Jammu on May 14, 2015. AFP PHOTO / RAKESH BAKSHI (Photo credit should read rakesh bakshi/AFP/Getty Images)

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 20)வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை வீசும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 22.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கண்ணம்மா ஹேமாவிற்கு ஊட்டி விடுவதை பார்த்து கோவமடையும் லட்சுமி – பல பாச போராட்டங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

23.04.2021 மற்றும் 24.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.

கொரோனா பரவல் எதிரொலி – திரையரங்குகளில் தீவிர கட்டுப்பாடு!!

20.04.2021 முதல் 21.04.2021 வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பிலிருந்து வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை தலா 7 செமீ, நாமக்கல், ஈரோடு தலா 5செமீ, எடப்பாடி, பல்லடம், கெட்டி, கோத்தகிரி தலா 4செமீ, கயத்தாறு 3செமீ, ஒகேனக்கல் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here