கொரோனா தடுப்பூசி வீணாக்குவதில் தமிழகத்திற்கு முதலிடம் – ஆர்டிஐ அதிரடி அறிக்கை!!

0

நாட்டில் தற்போது கொரோனாவின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்டிஐ அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தடுப்பூசியை அதிகமாக வீணாக்குவது தமிழகம் தான் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

தடுப்பூசிகள் வீண்:

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நாட்டில் தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்த செல்பவர்கள் தடுப்பூசி இல்லாத காரணத்தினால் தடுப்பூசி செலுத்தாமல் திரும்பி செல்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு குறித்து நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணி அளவில் மருந்து நிறுவனங்களுடன் அதிகமான அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் தற்போது நாட்டில் எந்த மாநிலம் மிக அதிகமான அளவில் தடுப்பூசிகளை வீணாக்கியுள்ளது என்பதனை ஆர்டிஐ தெரிவித்துள்ளது. அதன்படி ஆர்டிஐ கூறியதாவது, நாட்டில் மிக அதிகமான அளவில் தடுப்பூசியை வீணாக்குவதில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி – திரையரங்குகளில் தீவிர கட்டுப்பாடு!!

இதுகுறித்து தெரிவித்ததாவது, தமிழகத்திற்கு கடந்த 11ம் தேதி வரை மத்திய அரசிடமிருந்து 54,28,950 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 12.10% தடுப்பூசிகள் தமிழகத்தில் வீணாக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 6.5 லட்சத்திற்கும் மேலாக தமிழகத்தில் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளது என்று ஆர்டிஐ அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் மொத்தமாக 23% தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here