சென்னையில் முழு முடக்கம் – காவல்துறை ஆணையர் ஆலோசனை..!

0
AK Viswanathan
AK Viswanathan

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து 4 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழு முடக்கம்:

தமிழகத்தின் தலைநகர் என்பது மாறி கொரோனாவின் தலைநகராக சென்னை மாறி வருகிறது. அங்கு 11 நாட்களாக தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவக்குழு பரிந்துரையின் பேரில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வரும் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Police
Police

ரயில்வே தேர்வில் தமிழர்கள் திட்டமிட்ட புறக்கணிப்பு – ஸ்டாலின் ட்வீட்..!

இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக ஜூன் 21, 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட உள்ளது. இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் சட்டம்-ஒழுங்கு ஆணையர்கள் மற்றும் இணை, துணை ஆணையர்கள் பங்கேற்று உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here