ரயில்வே தேர்வில் தமிழர்கள் திட்டமிட்ட புறக்கணிப்பு – ஸ்டாலின் ட்வீட்..!

0
railway department exam
railway department exam

தற்போது நடந்து முடிந்த தெற்கு ரயில்வே சரக்கு வண்டி பாதுகாவலர் பணியிடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் இது 5 தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

ரயில்வே தேர்வு

தெற்கு ரயில்வே சரக்கு வண்டி பாதுகாவலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் 5000 பேர் கலந்துகொண்டனர். அதில் 3000 பேர் தமிழர்கள்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகி உள்ளன. மீதமுள்ள 91 இடங்களில் வாடா மாநிலத்தவர் தேர்வானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின்

இந்த தேர்வு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ராமதாஸ் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் த்விட்டேர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் தெற்கு ரயில்வே சரக்கு வண்டி பாதுகாவலர் பணியிடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இது தமிழர்களை திட்டமிட்டு புறக்கணிப்பதற்கான மற்றுமோர் ஆதாரம். இந்த அடிசேர்ப்பு முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சமூக நீதியையும் உருது செய்ய வேண்டும். என மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here