ஆதாரை வைத்து எளிமையான முறையில் இ பாஸ் பெறலாம் – ஆணையர் பிரகாஷ் தகவல்!!

1
tn e pass
tn e pass

கொரோனா ஊரடங்கின் பொது மக்கள் பலரும் அவர்களது சொந்த ஊருக்கும் மற்றும் உறவினர்களின் நல்ல கெட்ட காரியத்துக்கு கலந்து கொள்ள வெளி மாவட்டங்களுக்கு செல்லவும் முடியாமல் தவித்தனர். இ பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்று அரசு உத்தரவிட்டது. அதன் பின் அந்த இ பாஸ் பெற மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அரசு சில விதிமுறைகளுடன் இ பாஸ் கொடுத்தது. இன்று சென்னை மாநகராட்சியின் ஆணையர் இ பாஸ் எளிமையாக வழங்குகிறோம் என கூறினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆதார் பயனப்டுத்தி இ பாஸ் பெறலாம்

சென்னை அயனாவரத்தில் கொரோனா விழிப்புணர்வு பற்றி நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆணையர் கொரோனா தொற்று பற்றியும் நோய் தொற்று குறைந்து வருவதாகவும் நோயில் இருந்து 87.05% பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என கூறினார். பின் இ பாஸ் பற்றி சிலவற்றையும் கூறினார்.

tn e pass
tn e pass

தமிழகத்தில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா!!

மக்கள் இ பாஸ் பெறுவதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள் எனவே இ பாஸ் ஆதார் கார்டு பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதுமட்டுமில்லாமல் இ பாஸ் பெற்று தருவதாக பல ப்ரோக்கர்கள் மட்டும் போலி இ பாஸ்கலள் வழங்கி வருகிறார்கள் எனவே மக்கள் அதை பெற வேண்டாம் என்றும், மக்கள் இ பாஸ் எளிமையாக பெற 30% முதல் 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

1 COMMENT

  1. E pass very difficult to get ordinary people,so it is need not to ordinary people thanks, fever checking monitor and oxcition checking monitor will be adopted in the district boundaries thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here