12 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0

இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை அதிகரித்து முக்கிய மையமாக மாற்ற மத்திய அரசு கொண்டு வந்த 41,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எல்.ஐ திட்டத்தின் மூலம் 12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். மேலும் இதற்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உற்பத்தி ஊக்கத்தொகை திட்டம்:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (பி.எல்.ஐ) திட்டம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் இன்று விளக்கம் அளித்தார். இந்த திட்டத்திற்காக 22 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும், அவற்றின் மூலம் வரும் 5 ஆண்டுகளில் ரூ. 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

PM Modi
PM Modi

பிளாஸ்மா தானம் செய்தால் 5 ஆயிரம் ஊக்கத்தொகை – ஆந்திரா முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

சர்வதேச நிறுவனங்களுக்காக ரூ. 15,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையுள்ள போன்கள் தயாரிக்கப்படுவதால் நேரடியாக 3 லட்சம் மற்றும் மறைமுகமாக 9 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்த அமைச்சர் இந்த திட்டம் இந்தியாவிற்கு சாதகமானது என கூறியுள்ளார். இது எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை என அமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டத்தில் ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் வின்ஸ்ட்ரான் ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் விண்ணப்பத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here