Friday, April 19, 2024

எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி – முதல்வர் அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடபட்டுள்ளது , அதில் கூறியிருப்பது என்னவென்றால், எதிர்பாராமல் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம், சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் மகன் மாரிமுத்து விசைப்படகினை சரி செய்யும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கழுகேர்கடை கிராமத்தைச் சேர்ந்த அபுதாகீர் மகன் சாதிக் அலி என்பவர் படிக்கட்டில் இறங்கி வரும் போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பியில் கைப்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் ராஜன் என்கிற ராஜா மற்றும் கணேசன் மகன் ஆறுமுகம் எதிர்பாராத விதமாக மின்வேலியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
  • பள்ளிப்பட்டு வட்டம், கொளத்தூர் துணைமின் நிலையத்தில் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த ஆஞ்சிகான் மகன் முனுசாமி என்பவர் மின் கம்பத்தில், பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜெகதளா கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் மகன் செல்வன் பிரவீன் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த அமாவாசை மகள் செல்வி மங்கம்மா துணியினை உலர்த்த முற்படும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

  • சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த யசோதா கணவர் பாபு பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
  • இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் மகன் சிறுவன் சிபிராஜ் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்து மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 5 முதல் சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பம் – அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

  • தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் செல்வி காமாட்சி தனது வீட்டின் அருகில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தார்.

முதல்வர் இரங்கல்:

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -